சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் 5 சீசன்கள் சில வாரங்களுக்கு முன் நிறைவடைந்த நிலையில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் வகையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி பிக்பாஸ் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இதுவரை நடைபெற்ற பிக் பாஸ் சீசன் களிலிருந்து 14 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ள பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வனிதா அதிக மன உளைச்சல் காரணமாக போட்டியிலிருந்து விலகுவதாக தெரிவித்துவிட்டு திடீரென பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிலிருந்து வெளியேறினார்.

 மேலும் பிக் பாஸ் மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த உலகநாயகன் கமல்ஹாசன் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். தொடர்ந்து அடுத்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ரசிகர்களை சந்திப்பதாகவும் தெரிவித்து விடைபெற்றார்.

இதனிடையே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை அடுத்து யார் தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சிலம்பரசன் TR பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமையான இன்று(பிப்ரவரி 27) பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அதிரடியாக சிலம்பரசன் TR என்ட்ரி தரும் புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது. சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் அந்த ப்ரோமோ இதோ…