தமிழகத்தின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் STR.கடைசியாக சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு முன் செம பருமனாக இருந்த STR இந்த படத்திற்கு செம ட்ரான்ஸ்பரமேஷன் எடுத்திருந்தார் சிம்பு.இவரது லுக் படத்தில் பழைய சிம்புவை பார்ப்பது போல உள்ளது என்று பலரும் தெரிவித்திருந்தனர்.

ஈஸ்வரன் படம் பொங்கலையொட்டி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பாண்டியநாடு,ஜீவா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகியுள்ள ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார்.மாதவ் மீடியா ஒர்க்ஸ் மற்றும் D கம்பெனி இணைந்து தயாரிக்கின்றனர்.நிதி அகர்வால் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

பாரதிராஜா,முனீஷ்காந்த்,நந்திதா ஸ்வேதா,பாலசரவணன்,மனோஜ் பாரதிராஜா,ஸ்டன் சிவா,அருள்தாஸ்,காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியிருந்தனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தன.

திரையரங்குகளில் வெற்றிநடை போட்ட இந்த படம் தற்போது வரும் ஜூன் 12 முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இதனை தொடர்ந்து சில வாரங்களுக்கு பிறகு இந்த படம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது.