வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு பிறகு STR , ஹன்சிகா நடிக்கும் மகா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து STR45 படத்திலும்,வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்திலும் நடித்து வருகிறார்.

STR என்ன செய்தாலும் அவரை பற்றி என்ன செய்தி வந்தாலும் அது வைரலாகி விடும்.சமீபத்தில் இவரது சமையல்,ஜாகிங் வீடியோக்கள் வைரலாகி வந்தன.கெளதம் மேனன் இயக்கிய குறும்படத்திலும் வீட்டிலிருந்தே நடித்து கொடுத்திருந்தார்.

மாநாடு படத்திற்கு முன் STR பாண்டியநாடு,ஜீவா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகியுள்ள ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார்.மாதவ் மீடியா ஒர்க்ஸ் மற்றும் D கம்பெனி இணைந்து தயாரிக்கின்றனர்.நிதி அகர்வால் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த லாக்டவுன் நேரத்தில் சிம்பு உடலெடையை குறைத்து செம ட்ரான்ஸபார்மேஷன் ஆகியுள்ளார் என்று பலரும் தெரிவித்து வந்தனர்.ஈஸ்வரன் படத்தின் பர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியாகி அவர் செம ஸ்மார்ட்டாக ஸ்லிம்மாக மாறியுள்ளதை ரசிகர்கள் பார்த்து கொண்டாடி வந்தனர்.இந்த படத்தின் வேலைகள் அனைத்தையும் விறுவிறுவென முடித்து கொடுத்தார் சிம்பு.

சிம்புவின் ட்ரான்ஸபார்மேஷனை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.இந்த படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் பாடல்கள் கடந்த ஜனவரி 2ஆம் தேதி வெளியானது.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை இந்த படத்தின் பாடல்கள் பெற்று வருகின்றன.

இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்ட் அடித்தது.இந்த படம் ஜனவரி 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது,திரையரங்குகள் திறக்கப்படாத இடங்களில் இந்த படம் OTT வழியாக வெளியாகும் என்று படக்குழு அறிவித்தனர்.இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது,படத்தை ரிலீஸ் செய்யப்போவதில்லை என்று தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து OTT ரிலீஸை தள்ளிவைப்பதாக படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர்,இதனை தொடர்ந்து படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்று தெரிகிறது.