சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து தந்த திரைப்படம் ஈஸ்வரன். இந்த படத்திற்காக சிம்பு தன் உடல் எடையை வெகுவாக குறைத்து செம ஃபிட்டாக காணப்பட்டார். ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். படத்திற்கு தமன் இசையமைக்கிறார். 

கிராமத்து பின்னணி கொண்ட ஈஸ்வரன் படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா முக்கிய ரோலில் நடித்துள்ளார். காமெடி ரோலில் நடிகர் பால சரவணன் நடித்துள்ளார். சமீபத்தில் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்தது. இது குறித்து நடிகர் சிலம்பரசன் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவு செய்திருந்தார். மேலும் ஈஸ்வரன் படத்தின் டீஸர் வரும் தீபாவளி நாளில் வெளியாகும் என்றும் கூறிஇருந்தார்.

இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் சிலம்பரசன் ரசிகர்கள். படத்தின் இசையமைப்பாளர் தமன், ஈஸ்வரன் படத்தின் இசை பணிகளை துவங்கிவிட்டார். விரைவில் பாடல் குறித்த அப்டேட்டுகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மாத காலத்திற்குள் நடித்து முடித்ததுடன், டப்பிங்கும் பேசிக் கொடுத்துவிட்டார். சிம்பு, இப்படி தீயாக வேலை செய்வதை பார்த்து வியக்காதவர்களே இல்லை. 

இந்நிலையில் ஈஸ்வரன் படத்தின் பிரத்தியேக புகைப்படங்கள் வெளியாகி ஈர்த்து வருகிறது. ஃபிட்டாக கிராமத்து ரோலில் நடித்திருக்கும் சிம்புவை காண ஆவலாக உள்ளனர் திரை ரசிகர்கள். காதல், காமெடி, ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கலவையாக ஈஸ்வரன் திரைப்படம் இருக்கும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் இணையவாசிகள். 

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் மீண்டும் துவங்கியுள்ளது.