தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிலம்பரசன்.TR நடிப்பில் கடைசியாக சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. விரைவில் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாவது பாகமும் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக தற்போது இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகிவரும் பத்து தல படத்தில் AGR எனும் மிகமுக்கிய மிரட்டலான கதாபாத்திரத்தில் சிலம்பரசன்.TR நடித்து வருகிறார். சிலம்பரசன்.TR & கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்க தயாராகும் பத்து தல திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வருகிற டிசம்பர் 14ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகராக மட்டுமல்லாமல் பாடகராகவும் தொடர்ந்து பல பாடல்களை பாடி வரும் நடிகர் சிலம்பரசன்.TR முதல்முறையாக தற்போது பாலிவுட்டில் பாடகராக அடியெடுத்து வைக்கிறார். அந்தவகையில் ஹிந்தியில் சோனாக்ஷி சின்ஹா, ஹூமா குரேஷி உடன் இணைந்து பிரபல தமிழ் நடிகர் மஹத் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள டபுள் எக்ஸல் திரைப்படத்தில் சிலம்பரசன்.TR ஒரு பாடல் பாடியுள்ளார்.

இயக்குனர் சட்ரம் ரமணி இயக்கத்தில் உருவாகியிருக்கும் டபுள் எக்ஸல் திரைப்படம் வருகிற நவம்பர் 4ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் டபுள் எக்ஸல் திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன்.TR பாடியுள்ள டாலி டாலி பாடல் தற்போது வெளியானது. அந்தப் பாடல் இதோ…