தமிழகத்தில் 2021ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெறுகிறது.மக்கள் தங்கள் ஓட்டுக்களை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை அளிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.பலரும் தங்கள் வாக்குகளை விறுவிறுப்பாக செலுத்தி வருகின்றனர்.

மக்களுடன் இணைந்து அரசியல் பிரமுகர்கள்,சினிமா நட்சத்திரங்கள் என்று பலரும் தங்கள் வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர்.தற்போது நிலவி வரும் கொரோனா சூழல் காரணமாக வாக்காளர்கள் மாஸ்க் போன்ற பாதுகாப்பு உபகாரணங்களோடு வந்து வாக்களித்து வருகின்றனர்.

திரை நட்சத்திரங்கள் தங்கள் வாக்குகளை விறுவிறுப்பாக செலுத்தி வருகின்றனர்.இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில் பரப்பாக நடைபெற்று வருகிறது.50%துக்கும் மேலான வாக்குகள் பதிவாகி உள்ளன.தற்போது சிலம்பரசன் TR தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

சிலம்பரசன் தனது தொகுதியான தி நகர் பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார்.இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.