தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிலம்பரசன் TR.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.இதனை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு,பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் சிம்பு.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் டீஸர் நேற்று வெளியிடபட்டது.வித்தியாசமான இந்த டீஸர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில தினங்களுக்கு முன் தொடங்கியது.

இந்த ஷூட்டிங்கில் விறுவிறுப்பாக பங்கேற்று வந்த சிலம்பரசன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.தொண்டை வலி காரணமாக இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

இவருக்கு கொரோனா தொற்று இல்லை வெறும் வைரஸ் தாக்கம் தான் என்றும் தகவல் கிடைத்துள்ளது.விரைவில் இவர் குணமடைந்து வீடு திரும்ப ரசிகர்கள் தங்கள் பிரார்த்தனையை தெரிவித்து வருகின்றனர்.கலாட்டா சார்பாக சிலம்பரசன் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டிக்கொள்கிறோம்.