தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள திரைப்படம் மாநாடு. இயக்குனர் வெங்கட்பிரபு எழுதி இயக்கியுள்ள மாநாடு திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

முன்னதாக வெளியான மாநாடு திரைப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றதையடுத்து மாநாடு படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். திரையரங்குகள் திறக்கப்பட்ட உடன் மாநாடு படத்தின் ரிலீஸ் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.

அடுத்ததாக மீண்டும் கௌதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்திருக்கும் சிலம்பரசன் நடிப்பில் நதிகளிலே நீராடும் சூரியன் திரைப்படம் தயாராகவுள்ளது. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி.K.கணேஷ் அவர்கள் தயாரிப்பில் உருவாகும் நதிகளிலே நீராடும் சூரியன் படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் சிலம்பரசன் பாடிய தப்பு பண்ணிட்டேன் பாடலின் புதிய டீசர் வெளியானது. இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவின் U1 ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட தப்பு பண்ணிட்டேன் பாடலில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் மற்றும் நடிகை மேகா ஆகாஷ் நடித்திருந்தனர். அறிமுக இசையமைப்பாளர் A.K.பிரியன் இசையமைத்த இந்த சுயாதீன ஆல்பம் பாடலை யுவன் ஷங்கர் ராஜாவின் U1 ரெக்கார்டஸ்  உடன் இணைந்து அபி & அபி என்டர்டெயின்மென்ட் மற்றும் NOISE & GRAINS இணைந்து தயாரித்தது. 

தப்பு பண்ணிட்டேன் பாடலை இய்க்குனர் டாங்லி ஜம்போ இயக்க மேயாதமான் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் விது ஐய்யனா ஒளிப்பதிவு செய்திருந்தார். சாண்டி மாஸ்டரின் நடன இயக்கத்தில் வெளிவந்த இந்தப் பாடல் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த நிலையில், தற்போது இந்தப்பாடலில் லிரிக்கல் வீடியோ வெளியாக உள்ளது. அதற்கான முதல் ப்ரோமோவாக நடிகர் சிலம்பரசன் தப்பு பண்ணிட்டேன் பாடலை பாடும் புதிய ப்ரோமோ வீடியோ இன்று வெளியானது. அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.