தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிலம்பரசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்து நிற்கிறார். இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள மாநாடு திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் அடுத்ததாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தயாராகும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் ,இயக்குனர் ,எழுத்தாளர் ,பாடலாசிரியர் ,பாடகர் இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட சிலம்பரசனின் திரைப்பயணத்தில் சாதனைகளுக்கு தகுந்தாற்போல் பல சோதனைகளும் அமைவதுண்டு. முன்னதாக படப்பிடிப்புகளுக்கு தகுந்த நேரத்தில் வருவதில்லை,குறிப்பிட்ட நேரத்தில் படத்தை முடித்து கொடுப்பதில்லை என பல குற்றச்சாட்டுகளை சந்தித்தார் சிலம்பரசன்.

தான் சந்தித்த அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து கம்பேக்கில் சிக்ஸர் அடிப்பது சிலம்பரசனின் வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிலம்பரசனின் தோற்றம் குறித்து எழுந்த பல கேள்விகளுக்கு பதிலாய் ஈஸ்வரன் திரைப்படத்தில் மாஸாக டிரன்ஸ்பாமேஷன் கொடுத்து மிரட்டினார் சிலம்பரசன்.

2017 ஆம் ஆண்டு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படத்தின் போது நடிகர் சிலம்பரசனுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையில் வெடித்த ஒரு பிரச்சனையின் அனல் இன்னும் தீரவில்லை. ஒவ்வொரு படத்தை ஆரம்பிக்கும் பொழுதும் ஒவ்வொரு தடைகளை சந்தித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தொடங்கிய வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பை துவக்குவதிலும் அதே சிரமத்தை சந்தித்து வருகிறார் சிலம்பரசன்.

இந்நிலையில் நடிகர் சிலம்பரசனின் தாயார் உஷா ராஜேந்தர் இது குறித்து விளக்கமான ஆவேச வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் நடிகர் விஷால் தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்க தலைவர் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் நடிகர் சிலம்பரசனின் திரைப்படங்களின் படபிடிப்புக்கும் அவர் நடிப்பதற்கும் பல இடையூறுகளை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டி அந்த வீடியோவில் பேசியுள்ளார். அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.