இந்தியன் 2 படத்தில் சித்தார்த்திற்கு ஜோடியாகும் பிரபல ஹீரோயின் !
By Sakthi Priyan | Galatta | August 08, 2019 13:00 PM IST
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் இப்படத்திலும் கமல்ஹாசன் முதியவராகவும், இளமை தோற்றத்திலும் இரு வேடங்களில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், வித்யுத் ஜம்வால் போன்ற நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.
ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் சென்னைக்கு வந்து கமல்ஹாசனை வயதான தோற்றத்துக்கு மாற்றி மேக்கப் டெஸ்ட் மற்றும் படம் எடுத்தனர். அந்த தோற்றம் இப்போதும் அவருக்கு கச்சிதமாக பொருந்தி இருப்பதாக ஷங்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் முதல் லுக் வெளியானது, சேனாபதியை மீண்டும் கண்ட ரசிகர்கள் தெம்புடன் வரவேற்றனர்.ரத்னவேல் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாக என்ற தகவல் சமீபத்தில் தெரியவந்தது.
தற்போது வெளியான செய்தி என்னவென்றால், இந்தியன் 2 படத்தில் சித்தார்த்திற்கு ஜோடியாக நடிக்கவுள்ளாரென சமீபத்தில் நடந்த மன்மதடு 2 ஆடியோ லான்ச்சில் உறுதி செய்துள்ளார்.