'இது ஒரு நிறக்குருடு!' வில்லன்களுக்கு CLASS எடுக்கும் யோகி பாபு... சித்தார்த்தின் டக்கர் பட கலகலப்பான SNEAK PEEK வீடியோ இதோ!

சித்தார்த் - யோகி பாபுவின் கலகலப்பான டக்கர் பட SNEAK PEEK வீடியோ,siddharth yogi babu in takker movie new sneak peek video | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சித்தார்த் நடிப்பில் தயாராகி இருக்கும் டக்கர் திரைப்படத்திலிருந்து யோகி பாபுவின் நகைச்சுவையான SNEAK PEEK வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த சித்தார்த் நடிப்பில் கடைசியாக தமிழில் கடந்த 2019 ஆம் ஆண்டு சிகப்பு மஞ்சள் பச்சை மற்றும் அருவம் ஆகிய திரைப்படங்கள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றன. தொடர்ந்து தெலுங்கில் கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஷர்வானந்த் உடன் இணைந்து மகா சமுத்திரம் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் சித்தார்த் நடித்திருந்தார். 

இந்த வரிசையில் சித்தார்த் நடிக்கும் அடுத்தடுத்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க, தற்போது தயாராகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக திகழும் தயாரிப்பாளர் சசிகாந்த் முதல் முறை இயக்குனராக களமிறங்க, மாதவன், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் டெஸ்ட் திரைப்படத்திலும் சித்தார்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல் இயக்குனர் S.U.அருண் குமார் இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் சித்தா திரைப்படத்திலும் கதையின் நாயகனாக சித்தார்த் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த வரிசையில் சித்தார்த் நடிப்பில் பக்கா ரொமான்டிக் ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படமாக அடுத்து வெளிவர தயாராக இருக்கும் திரைப்படம் தான் டக்கர். கப்பல் படத்தின் இயக்குனர் கார்த்திக்.ஜி.க்ரிஷ் இயக்கத்தில் சித்தார்த் உடன் இணைந்து திவ்யன்ஷா கதாநாயகியாக நடித்திருக்கும் டக்கர் திரைப்படத்தில் யோகி பாபு, அபிமன்யு சிங், முனிஸ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். PASSION STUDIOS சார்பில் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் மற்றும் ஜி.ஜெயராம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் டக்கர் திரைப்படத்திற்கு வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவில், ஜி.ஏ.கௌதம் படத்தொகுப்பு செய்ய, நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். வருகிற ஜூன் 9ம் தேதி டக்கர் திரைப்படம்  உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. 

இந்த நிலையில் டக்கர் திரைப்படத்திலிருந்து கலக்கலான நகைச்சுவை காட்சி ஒன்றை SNEAK PEEK வீடியோவாக பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.  வில்லன் தேடும் ஒரு காரின் புகைப்படத்தை செல்போன் மூலம் தனது அடியாட்களுக்கு காட்ட ஒவ்வொருவரும் பச்சை என சொல்ல ஒருவர் மட்டும் சிகப்பு என சொல்கிறார். அதற்கான காரணம், மாலைக்கண் நோய் போலவே COLOR BLINDNESS என்ற நிறக்குருடு பற்றி யோகி பாபு விளக்கும் இந்த காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிற கலகலப்பான அந்த SNEAK PEEK வீடியோ இதோ…
 

சினிமா

"இந்தியாவின் முதல் தலைசிறந்த ALL TIME PAN INDIA STAR கமல் சார் தான்!"- வைரலாகும் சித்தார்த்தின் அட்டகாசமான வீடியோ இதோ!

உங்களை இயக்கும் நாள் வரும் என நினைத்ததே இல்லை!- சூப்பர் ஸ்டார் பற்றி எமோஷனலான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... லால் சலாம் பட புது GLIMPSE இதோ!
சினிமா

உங்களை இயக்கும் நாள் வரும் என நினைத்ததே இல்லை!- சூப்பர் ஸ்டார் பற்றி எமோஷனலான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... லால் சலாம் பட புது GLIMPSE இதோ!

மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் திருமணம் குறித்து கேள்வி.. - மாஸ் ரிப்ளே கொடுத்த கீர்த்தி சுரேஷ் ..! – வைரல் வீடியோ உள்ளே..
சினிமா

மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் திருமணம் குறித்து கேள்வி.. - மாஸ் ரிப்ளே கொடுத்த கீர்த்தி சுரேஷ் ..! – வைரல் வீடியோ உள்ளே..