இந்திய சினிமாவின் மிக முக்கிய  நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் சித்தார்த் நடிப்பில் தமிழில் கடைசியாக அருவம் திரைப்படம் வெளியானது. தொடர்ந்து இயக்குனர் மணிரத்னத்தின் தயாரிப்பில் நெட்பிளிக்ஸில் வெளியான நவரசா ஆன்தாலஜி வெப் சீரிஸில் இன்மை எனும் எபிசோடில் நடித்திருந்தார்.

தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் சித்தார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக சித்தார்த் நடிப்பில் ஆயுத பூஜை வெளியீடாக வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி(நாளை) திரைக்கு வருகிறது மஹா சமுத்திரம் திரைப்படம். 

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகியுள்ள மஹா சமுத்திரம் திரைப்படத்தை இயக்குனர் அஜய் பூபதி இயக்கியுள்ளார். நடிகர்கள் சித்தார்த் மற்றும் சர்வானந்த் கதாநாயகர்களாக நடிக்க, கதாநாயகிகளாக அதிதி ராவ் ஹைதாரி & அனு இமானுவேல் மற்றும் வில்லன்களாக ஜெகபதி பாபு மற்றும் கேஜிஎஃப் பட புகழ் கருடா ராம் ஆகியோர் நடித்துள்ளனர்

A.K. என்டர்டெயின்மென்ட் சார்பில் அணில் சங்கரா தயாரித்துள்ள மஹா சமுத்திரம் படத்திற்கு சைட்டன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் மஹா சமுத்திரம் படத்தின் “ஜகடலே ராணி” பாடல் வீடியோ வெளியானது. சித்தார்த் மற்றும் சர்வானந்தின் அதிரடியான இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.