கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படத்தை ரீமேக் செய்ய விரும்பிய கே.பாலச்சந்தர்... காலில் விழுந்து மறுத்த சித்தார்த்! காரணம் என்ன? வீடியோ இதோ

கமல்ஹாசன்-K.பாலச்சந்தரின் சூப்பர் ஹிட் பட ரீமேக்கை மறுத்த சித்தார்த்,Siddharth refused to do remake of manmadha leelai kamal haasan | Galatta

இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களின் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் கதாநாயகனாக நடித்து கடந்த 1976ம் ஆண்டு வெளிவந்து மெகா ஹிட்டான மன்மத லீலை திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க கே.பாலச்சந்திரன் அவர்களே கேட்ட போதும் காலில் விழுந்து வேண்டாம் என மறுத்ததாக நடிகர் சித்தார்த் தெரிவித்திருக்கிறார். இந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக தமிழ், தெலுங்கு & ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த நடிகர் சித்தார்த் நடிப்பில் பக்கா ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படமாக தயாராகி இருக்கும் டக்கர் திரைப்படம் வரும் (நாளை) ஜூன் 9ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த வரும் இந்தியன் 2 படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்து வரும் சித்தார்த், தனது சொந்த தயாரிப்பில் இயக்குனர் S.U.அருண்குமார் இயக்கத்தில் உருவாக்கி வரும் சித்தா தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குனராக களமிறங்கும் டெஸ்ட் மற்றும் பெயரிடப்படாத ஒரு புதிய ரொமான்டிக் படம் என வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற சித்தார்த் ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சித்தார்த் நம்மோடு பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் முன்னதாக உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் ஒரு காணொளியை ஒளிபரப்பிய போது, தன் மானசீக குருவான கமல் ஹாசன் குறித்து எமோஷனலான சித்தார்த் கண் கலங்கினார். தொடர்ந்து பேசியபோது, “குருவுக்கு ஒரு அர்ப்பணிப்பாக அவருடைய ஒரு காட்சியை நீங்கள் ரி கிரியேட் செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறோம்” எனக் கேட்டபோது, “நீங்கள் அந்த காட்சியை காட்டுங்கள் ஆனால் அதற்கு முன்பு நான் ஒன்று சொல்கிறேன். அவரை உருவாக்கியவரே என்னை அழைத்து அவருடைய படத்தை நானே எடுக்கிறேன்… ரீமேக் பண்ணலாம் வா என கூப்பிட்டார். மன்மத லீலை திரைப்படத்தை KB சார் (இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர்) என்னை வைத்து பண்ண வேண்டும் என சொன்னார். நான் அப்படியே அவருடைய காலில் விழுந்து நான் உங்கள் படத்தையும் ரீமேக் செய்ய மாட்டேன். அவருடைய படத்தையும் ரீமேக் செய்ய மாட்டேன். நீங்கள் ரெண்டு பேரும் செய்த ஒரு படத்தை சத்தியமாக தொடவே மாட்டேன் என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன். எனவே நான் சத்தியமாக கமல் சாருடைய எதையுமே செய்து காட்ட மாட்டேன். ஏனென்றால் சில விதிகள் இருக்கின்றன, ஆங்கிலத்தில் Inimitable என்று ஒரு வார்த்தை இருக்கிறது. யாருமே அந்த மாதிரி செய்ய முடியாது என்று சில பேர் இருக்கிறார்கள். அதுல ஒருத்தர் எங்க கமல் சார். எனவே அவருடைய படங்கள் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் காட்டுங்கள். நான் பார்க்காத அவருடைய சீன் கிடையாது. அவர் பேசிய வசனம் எனக்கு தெரியாமல் எல்லாம் இல்லை. ஆனால் கடவுள் மாதிரி எல்லாம் நடிக்க முடியாது. அதுவும் கடவுள் நம்பிக்கை இல்லாத கடவுள் மாதிரி நம்பிக்கை இருந்து நடிப்பது ரொம்ப கஷ்டம்.” என தெரிவித்துள்ளார். அந்த வீடியோ இதோ…
 

சீயான் விக்ரமின் துருவ நட்சத்திரம் பட புது ட்ரெய்லர் & ரிலீஸ் திட்டம் பற்றிய அதிரடி தகவல்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
சினிமா

சீயான் விக்ரமின் துருவ நட்சத்திரம் பட புது ட்ரெய்லர் & ரிலீஸ் திட்டம் பற்றிய அதிரடி தகவல்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

SJசூர்யா - பிரியா பவானி சங்கரின் பொம்மை... மான்ஸ்டர் வெற்றி கூட்டணியின் அசத்தலான இந்த காதலில் வீடியோ பாடல் இதோ!
சினிமா

SJசூர்யா - பிரியா பவானி சங்கரின் பொம்மை... மான்ஸ்டர் வெற்றி கூட்டணியின் அசத்தலான இந்த காதலில் வீடியோ பாடல் இதோ!

தல MSதோனி தயாரிப்பில் முதல் தமிழ் படம் LGM... ஹரிஷ் கல்யாண் - 'லவ் டுடே' இவானா காம்போவின் கலக்கலான டீசர் இதோ!
சினிமா

தல MSதோனி தயாரிப்பில் முதல் தமிழ் படம் LGM... ஹரிஷ் கல்யாண் - 'லவ் டுடே' இவானா காம்போவின் கலக்கலான டீசர் இதோ!