தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் S.U.அருண்குமார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து இவரது இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வெளிவந்த சேதுபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது.

தமிழில் வெற்றிபெற்ற சேதுபதி திரைப்படம் தெலுங்கில் ஜெயதேவ் என ரீமேக் செய்யப்பட்டது. கடைசியாக இயக்குனர் S.U.அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வெளிவந்த சிந்துபாத் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இதனையடுத்து S.U.அருண்குமார் இயக்கும் புதிய படத்தில் நடிகர் சித்தார்த் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்த புதிய திரைப்படத்தை இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் காதலில் சொதப்புவது எப்படி, இயக்குனர் தீரஜ் வைத்தி இயக்கத்தில் ஜில் ஜங் ஜக் மற்றும் இயக்குனர் மிலின்ட் ராவ் இயக்கத்தில் அவள் என சித்தார்த் கதாநாயகனாக நடித்த திரைப்படங்களை தயாரித்த Etaki டிரேட்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. 

Etaki என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் 4-வது திரைப்படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகவுள்ள இத்திரைப்படத்தை அறிமுகம் செய்யும் வகையில் புதிய போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இத்திரைப்படம் குறித்து அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.