தமிழ் திரையுலகில் சிறந்த ஸ்கிரிப்ட்டுகளை தேர்தெடுத்து அதில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தும் ஹீரோக்களில் ஒருவர் சிபிராஜ். அறிமுக இயக்குநர் அன்பு இயக்கத்தில் இவர் நடித்துள்ள படம் வால்டர். இதில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். சிபிராஜூக்கு ஜோடியாக நடிகை ஷிரின் கான்ச்வாலா நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. ரித்விகா, சனம் ஷெட்டியும் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். 

walter walter

11:11 நிறுவனத்தின் சார்பாக இப்படத்தை டாக்டர் பிரபு திலக் தயாரித்துள்ளார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்தப் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவிருந்த இயக்குனர் கவுதம் மேனன் நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக சமீபத்தில் நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளரான நட்டி நட்ராஜ் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியானது. தர்ம பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

walter

படத்தின் விறுவிறுப்பான டீஸர் இணையத்தை ஈர்த்து வருகிறது. படத்தின் ஜுக் பாக்ஸ் சமீபத்தில் வெளியானது. தற்போது இப்படம் 6-ம் தேதி வெளியாகவுள்ளது என அறிவிப்பு வெளியானது.