தமிழ் திரையுலகில் சிறந்த ஸ்கிரிப்ட்டுகளை தேர்தெடுத்து அதில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தும் ஹீரோக்களில் ஒருவர் சிபிராஜ். அறிமுக இயக்குநர் அன்பு இயக்கத்தில் இவர் நடித்து வரும் படம் வால்டர். இதில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். சிபிராஜூக்கு ஜோடியாக நடிகை ஷிரின் கான்ச்வாலா நடித்து வருகிறார். இந்த படத்தின் டீஸர் இரண்டு தினங்களுக்கு முன் வெளியானது. 

ranger

இதனைத் தொடர்ந்து தரணிதரன் இயக்கத்தில் ரேஞ்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் தரணிதரன் இதற்கு முன் ஜாக்சன் துரை படத்தை இயக்கியுள்ளார். ஆரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். அரோல் கரோலில் இசையமைக்கிறார்.

ranger ranger

ரேஞ்சர் படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சிறந்த வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் முக்கிய காட்சிகள் கொண்ட படப்பிடிப்பு முடிவடைந்ததாக பதிவு செய்துள்ளார் இயக்குனர். பாடல் காட்சி மற்றும் பேட்ச் பணிகள் மீதம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.