பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடித்துள்ள படம் கபடதாரி. நாசர், நந்திதா ஸ்வேதா, மயில்சாமி, ஜெயபிரகாஷ், ஜே.சதிஷ் குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சைமன் K கிங் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 

Sibirajs Kabadadaari Movie Dubbing Update

சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் கதையாக உருவாகிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்றது. சத்யா படத்திற்கு பிறகு இந்த கூட்டணி இணைந்திருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Sibirajs Kabadadaari Movie Dubbing Update

கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் உள்ளது. படப்பிடிப்பு இல்லாமல் நடிகர்கள் மற்றும் சினிமா சார்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் வீட்டிலே முடங்கியுள்ளனர். அரசு உத்தரவு படி சமூக இடைவெளியுடனும், பாதுகாப்புடனும் படங்களின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் சமீபத்தில் துவங்கியது. இந்நிலையில் கபடதாரி படத்தில் டப்பிங் பணிகளும் ஆரம்பமானது. நாசர், ஜெயபிரகாஷ் போன்ற நடிகர்கள் தங்கள் டப்பிங்கை முடித்தனர். இவர்களை தொடர்ந்து தனஞ்ஜெயன் தனது டப்பிங்கை இன்று முடித்துள்ளார்.