தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்தெடுத்து நடிப்பவர் சிபிராஜ்.இவர் கடைசியாக சத்யா என்ற படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.அதனை தொடர்ந்து ரங்கா,மாயோன்,வால்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.

Sibiraj Ranga First Single On Feb 14 Nikhila Vimal

ரங்கா படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார்.சதிஷ் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அறிமுக இயக்குனர் வினோத் இந்த படத்தை இயக்கியுள்ளார்.ராம்ஜீவன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Sibiraj Ranga First Single On Feb 14 Nikhila Vimal

பாஸ் மூவிஸ் சார்பில் விஜய் கே செல்லையா இந்த படத்தை தயாரித்துள்ளார்.இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.அனிருத் பாடிய இந்த படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 

Sibiraj Ranga First Single On Feb 14 Nikhila Vimal