தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்தெடுத்து நடிப்பவர் சிபிராஜ்.இவர் கடைசியாக சத்யா என்ற படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.அதனை தொடர்ந்து ரங்கா,மாயோன்,வால்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.

Sibiraj Ranga Censored UA February Release

ரங்கா படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார்.சதிஷ் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அறிமுக இயக்குனர் வினோத் இந்த படத்தை இயக்கியுள்ளார்.ராம்ஜீவன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Sibiraj Ranga Censored UA February Release

பாஸ் மூவிஸ் சார்பில் விஜய் கே செல்லையா இந்த படத்தை தயாரித்துள்ளார்.இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படத்தின் சென்சார் வேலைகள் நிறைவடைந்து படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த படம் பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது.

Sibiraj Ranga Censored UA February Release