தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்தெடுத்து நடிப்பவர் சிபிராஜ்.இவர் கடைசியாக சத்யா என்ற படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.அதனை தொடர்ந்து ரங்கா,மாயோன்,வால்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Sibiraj Nandita Swetha Film Titled Kadabadhaari

ரங்கா படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து சைத்தான்,சத்யா படங்களை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கிறார்.இந்த படத்திற்கு கடபதாரி என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.

Sibiraj Nandita Swetha Film Titled Kadabadhaari

Sibiraj Nandita Swetha Film Titled Kadabadhaari

நந்திதா ஸ்வேதா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.இந்த படத்தின் ஷூட்டிங் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Sibiraj Kadabadhaari