தமிழ் திரையுலகில் சிறந்த ஸ்கிரிப்ட்டுகளை தேர்தெடுத்து அதில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தும் ஹீரோக்களில் ஒருவர் சிபிராஜ். கடைசியாக அறிமுக இயக்குநர் அன்பரசன் இயக்கத்தில் வால்டர் படத்தில் நடித்திருந்தார். காவல்துறை அதிகாரியாக நடித்து அசத்தினார். 

Sibiraj

இதனைத்தொடர்ந்து சிபி சத்யராஜ் கபடதாரி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் இயக்குநர் ஜான் மகேந்திரன் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர். இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தை இயக்கி வருகிறார்.

Sibiraj

இந்நிலையில் நடிகர் சிபி சத்யராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை குறித்து பதிவு செய்துள்ளார். இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி வீர மரணம் அடைந்து தமிழர்க்கு பெருமை சேர்த்த மாபெரும் போராளி! இவர் பெயரை என் மகனுக்கு சூட்டியதில் மிகவும் பெருமை படுகிறேன் என பதிவு செய்துள்ளார்.