தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான படங்கள் மூலம் பிரபலமான நடிகராக உருவெடுத்தவர் சிபிராஜ்.ஸ்டூடெண்ட் நம்பர் 1 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் சிபிராஜ்.ஜோர்,நாய்கள் ஜாக்கிரதை,சத்யா உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

அடுத்ததாக இவர் ரங்கா,ரேஞ்சர்,மாயோன்,வட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.இந்த படங்கள் விரைவில் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.2003 ஆம் ஆண்டு ஹீரோவாக பயணத்தை தொடங்கிய இவர் தனது திரைவாழ்க்கையில் 20ஆவது வருடத்தில் அடியெடுத்து வைக்கவுள்ளார்.

தற்போது இவர் நடிக்கும் 20ஆவது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த படத்தை பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் கார்த்திகேயன் தயாரிக்கிறார்.அறிமுக இயக்குனர் பாண்டியன் ஆதிமூலம் இந்த படத்தினை இயக்குகிறார்.இந்த படம் தமிழ்-தெலுங்கு Bilingual ஆக உருவாகிறது.

இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கிறார்.இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர் நடிகைகள் குறித்த தகவல் மற்றும் ஷூட்டிங் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.