தமிழ் திரையுலகின் பிரபல கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் சிபி சத்யராஜ். கடைசியாக தமிழ் சினிமாவில் காவல்துறை அதிகாரியாக நடிகர் சிபி சத்யராஜ் நடித்து வெளிவந்த க்ரைம் த்ரில்லர் திரைப்படங்களான வால்டர் மற்றும் கபடதாரி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து அதிரடி ஆக்ஷன் திரில்லர் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் அடுத்ததாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் ரங்கா திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. மேலும் இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கத்தில் வட்டம் திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது சிபி சத்யராஜின் ஆக்ஷன் ஃபேன்டசி த்ரில்லர் திரைப்படமாக தயாராகி இருக்கும் மாயோன் திரைப்படத்தின் டீசர் வெளியானது. இயக்குனர் N.கிஷோர் இயக்கத்தில் சிபி சத்யராஜ் உடன் இணைந்து தன்யா ரவிச்சந்திரன், கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி, ஹரிஷ் பெரடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மாயோன் படத்தை டபுள் மீனிங் புரோடக்சன் சார்பில் தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் தயாரித்து, திரைக்கதையும் எழுதியிருக்கிறார். ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும் மாயோன் படத்தின் விறுவிறுப்பான டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.