தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ந்து சிறந்த படைப்புகளை வழங்கி வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்தடுத்து வரிசையாக திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. அந்த வகையில் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் வட்டம்.

தனது முதல் படமான மதுபானக்கடை திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கத்தில் அடுத்த படைப்பாக உருவாகியிருக்கும் வட்டம் திரைப்படத்தில் சிபி சத்யராஜ் ஆண்ட்ரியா அதுல்யா ரவி மற்றும் வம்சிகிருஷ்ணா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

PV சங்கர் ஒளிப்பதிவில், T.சிவானந்தீஸ்வரன் படத்தொகுப்பு செய்துள்ள வட்டம் திரைப்படத்திற்கு, நிவாஸ்.K.பிரசன்னா இசையமைத்துள்ளார். மேலும் வட்டம் திரைப்படம் வருகிற ஜூலை 29-ம் தேதி நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

விறுவிறுப்பான திரைப்படமாக தயாராகியிருக்கும் வட்டம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது வட்டம் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வட்டம் திரைப்படத்தின் ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.