தமிழ் திரையுலகின் பிரபல கதாநாயகராக திகழும் நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் மாயோன். ஃபேன்டசி அட்வென்சர் த்ரில்லர் திரைப்படமாக தயாராகியுள்ள மாயோன் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். மாயோன் திரைப்படம் வருகிற ஜூன் 17-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

தொடர்ந்து அதிரடி ஆக்ஷன் திரில்லர் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் சிபி சத்யராஜ்  முன்னதாக இயக்குனர் தரணிதரன் இயக்கத்தில் நடித்துள்ள ரேஞ்சர் மற்றும் இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கத்தில் நடித்துள்ள வட்டம் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.  இந்த வரிசையில் அடுத்ததாக சிபி சத்யராஜ் நடிப்பில் வெளிவர உள்ள திரைப்படம் ரங்கா.

இயக்குனர் வினோத்.DL இயக்கத்தில் ரங்கா படத்தில் சிபி சத்யராஜ் உடன் இணைந்து நிகிலா விமல் கதாநாயகியாக நடிக்க சதீஷ், மோனிஷ் ரேகா, மனோ பாலா மற்றும் ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அர்வி ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பு செய்துள்ள ரங்கா படத்திற்கு ராம் ஜீவன் இசையமைத்துள்ளார்.

பாஸ் மூவிஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ரங்கா திரைப்படத்திற்கு தாமரை, விவேக், கார்த்திக் நேத்தா மற்றும் முன்னா ஷங்கர் பாடல்களை எழுதியுள்ளனர். ரங்கா படம் வருகிற மே 13-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் ரங்கா திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் தற்போது வெளியானது. அந்த டிரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.