கவனிக்க வைக்கும் கைதி தயாரிப்பாளரின் அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக்!
By Anand S | Galatta | June 27, 2022 18:06 PM IST

தமிழ் திரையுலகில் சிறந்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் ஜோக்கர், தீரன் அதிகாரம் ஒன்று, அருவி, கைதி, சுல்தான் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளது. முன்னதாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடித்த O2 திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு நேரடியாக டிஸ்னக ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது
அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கு என நடிகர் சர்வானந்த் நடிப்பில் உருவாகியுள்ள கணம் திரைப்படத்தையும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. மேலும் கைதி படத்தின் ஹிந்தி ரீமேக்காக அஜய் தேவ்கன் நடிப்பில் தயாராகிவரும் போலா திரைப்படத்தையும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த வரிசையில் அடுத்ததாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வட்டம். இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில் சிபி சத்யராஜ் மற்றும் ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள வட்டம் திரைப்படத்தில் அதுல்யா ரவி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
வட்டம் படத்திற்கு நிவாஸ்.K.பிரசன்னா இசை அமைத்துள்ளார். வட்டம் திரைப்படம் விரைவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வட்டம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. கவனிக்க வைக்கும் அந்த ஃபர்ஸ்ட் லுக் இதோ…
What if the start and end are the same point?
— DreamWarriorPictures (@DreamWarriorpic) June 27, 2022
Here’s #VattamFirstLook #Vattam #வட்டம் @Sibi_Sathyaraj @andrea_jeremiah @AthulyaOfficial @nivaskprasanna @sukameekannan @prabhu_sr @disneyplusHSTam #VattamOnDisneyplusHotstar pic.twitter.com/Gb25NLsedu