இந்த நேரத்தை கவனமாக செலவிடுங்கள்...ஸ்ருதிஹாசன் பதிவு !
By Aravind Selvam | Galatta | May 06, 2020 20:46 PM IST

தமிழ்,தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்துவருபவர் ஸ்ருதிஹாசன்.7ஆம் அறிவு,3,புலி,வேதாளம் என்று முக்கிய ஹீரோக்களுடன் நடித்து ஹிட் நாயகியாக திகழ்ந்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.
அடுத்ததாக விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.கொரோனா காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பல பிரபலங்களும் தங்களது நேரத்தை ரசிகர்களுடன் சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.
ஊரடங்கு முடியும் முன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துகொண்ட ஸ்ருதி.ஊரடங்கு முடிந்தபின்னும் நாம் கூட்டம் கூடுவதை தவிர்க்கவேண்டும் என்றும் கண்ணனுக்கு தெரியாத ஒரு நோயுடன் போராடி வருகிறோம் அதனால் அஜாக்கிரதையாக இருக்கவேண்டாம் என்றும் அவர் பதிவிட்டார்.இந்த நேரத்தை உங்களை மெருகேற்றிக்கொள்ள பயன்படுத்துங்கள் என்று தெரிவித்துள்ளார்.