தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என இந்திய சினிமாவின் முன்னணி மொழிகளில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வரும் நடிகை ஸ்ருதிஹாசன் கடைசியாக, மறைந்த தமிழ் இயக்குனர் S.P.ஜனநாதன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த லாபம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

அடுத்ததாக கேஜிஎஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வரும் சலார் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதனையடுத்து தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நந்தமுரி பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் கோபிசந்த் மலிநேனி எழுதி இயக்கும் #NBK107 என்னும் இந்த புதிய திரைப்படத்துக்கு முன்னணி இசையமைப்பாளர் தமன்.S இசையமைக்கிறார். ரிஷி பஞ்சாபி ஒளிப்பதிவு செய்ய நவீன் நூலி படத்தொகுப்பு செய்கிறார்.

இந்நிலையில் இன்று #NBK107 திரைப்படத்தின் படப்பிடிப்பு பட பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து #NBK107 படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நந்தமூரி பாலகிருஷ்ணா, ஸ்ருதிஹாசன், இயக்குனர் கோபிசந்த் மற்றும் ப டக்குழுவினர் கலந்து கொண்ட #NBK107 படத்தின் படப் பூஜை புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.