எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் லாபம் படத்தில் விஜய் சேதுபதிக்கு நாயகியாக நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பதிவில், கோவிட் என்பது ஆரோக்கியத்துக்கு வரும் தீவிரமான ஒரு ஆபத்து. இந்தத் தொற்றுப் பிரச்சினை இன்னும் முடியவில்லை. விதிமுறைகள் ஒழுங்காகப் பின்பற்றப்படவில்லை என்றால் ஒரு தனி நபராக, நடிகையாக எனது பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க எனக்கு உரிமை இருக்கிறது என்று ட்வீட் செய்திருந்தார்.

பலருமே இது வழக்கமாக அவர் வெளியிட்ட விழிப்புணர்வு ட்வீட் என்று தான் கருதினார்கள். ஆனால், லாபம் படக்குழுவினர் மீதான அதிருப்தியில் தான் இந்த பதிவை ஸ்ருதி ஹாசன் வெளியிட்டுள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர் இணையவாசிகள். லாபம் படப்பிடிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியைப் பார்க்க ரசிகர்கள் குவிந்திருக்கிறார்கள். அவர்களைச் சந்தித்து செல்ஃபி எடுத்து, கை குலுக்கிவிட்டுத் திரும்பியிருக்கிறார் விஜய் சேதுபதி.

ரசிகர்களைச் சந்தித்துவிட்டு மீண்டும் வந்து நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இதனால் கடும் அதிருப்தியடைந்தே ஸ்ருதிஹாசன் ட்வீட் செய்திருப்பதாக ஸ்ருதிஹாசனின் பதிவின் கீழ் குறிப்பிட்டு வருகின்றனர் ரசிகர்கள். இது தொடர்பாக லாபம் படக்குழுவினரும் அமைதி காத்து வருகிறார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் லாபம் படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடையவுள்ளது என செய்திகள் வெளியாகிறது. 

இயற்கை, ஈ, பேராண்மை போன்ற சிறந்த படைப்புக்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லாபம். சமூக அக்கறை மிகுந்த கதையை பேசும் ஜனநாதனின் திரைமொழிக்கு தனி ரசிகர்கள் உண்டு. புறம்போக்கு படத்தில் விஜய் சேதுபதியை இயக்கிய ஜனநாதன், இரண்டாவது முறையாக லாபம் படத்தில் இயக்கி வருகிறார். 

இந்த படத்தில் ஜகபதி பாபு, சாய் தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் லாபம் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் விஜய் சேதுபதியுடன் டேனியல் ஆனி பாப், கலையரசன் ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். 

படப்பிடிப்பு தளத்தில் தினமும் விஜய் சேதுபதியை காண கும்பலாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். நடிகர் டேனியல் ஆனி பாப் பகிர்ந்த ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவிலும் குறிப்பாக குழந்தைகள் விஜய் சேதுபதியை நோக்கி கையசைத்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. ரசிகர்களை சந்தித்த பிறகே மேக்கப் போட செல்கிறார் மக்கள் செல்வன். 

இந்த காரணத்தில் தான் ஸ்ருதி ஹாசன் படப்பிடிப்பில் இல்லையா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள். ஒருவேளை ஸ்ருதி ஹாசன் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் நிறைவடைந்திருக்கலாம் என்றும் ஒரு தரப்பு ரசிகர்கள் கூறி வருகின்றனர். எதுவாக இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்.