தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை ஸ்ருதிஹாசன்.7ஆம் அறிவு திரைப்படத்தில் அறிமுகமாகி 3, புலி, வேதாளம், பூஜை என பல வெற்றி படங்களில் நடித்தார். தற்போது இயக்குனர் SP ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

Shruthi Haasan Shares Quarantine Funny Post

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, சமையல் செய்வது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். 

Shruthi Haasan Shares Quarantine Funny Post

இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காமெடியாக ஒரு வீடியோ பதிவு செய்துள்ளார். குவாரண்டீனில் என்ன செய்தீர்கள் என்ற கேப்ஷனுடன், சோளி கே பீச்சே கியா ஹை என்ற ஹிந்தி பாடலுக்கு முன்னால் வரும் குக் குக் குக் என்ற ஹம்மிங்கை வைத்து பதிவு செய்துள்ளார். இந்த பதிவிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2020 so far

A post shared by @ shrutzhaasan on