2005-ல் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்த மழை படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் ஷ்ரேயா சரண்.இந்த படத்திற்கு முன் உனக்கு 20 எனக்கு 18 உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகையாக நடித்திருந்த ஷ்ரேயா.இந்த படத்தின் மூலம் முழுநேர கதாநாயகியாக அறிமுகமானார்.இந்த படத்தில் இவரது கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் சிவாஜி,தளபதி விஜயுடன் அழகிய தமிழ் மகன்,தனுஷுடன் குட்டி,விக்ரமுடன் கந்தசாமி என்று பெரிய நடிகர்களுடன் நடித்து தனக்கென்ற ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்தார் ஷ்ரேயா.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்தார் ஷ்ரேயா.

டாப் ஹீரோயினாக அனைத்து மொழிகளிலும் கலக்கினார் ஷ்ரேயா.ரஷ்யாவை சேர்ந்த ஆன்ட்ரேய் கொஸ்சேவ் என்பவரை கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் முடித்தார் ஷ்ரேயா.இவர் நடிப்பில் நரகாசூரன்,சண்டக்காரி உள்ளிட்ட படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன.ராஜமௌலி இயக்கத்தில் தயாராகி வரும் RRR படத்தில் முக்கிய கௌரவ வேடத்தில் நடித்துள்ளார் ஷ்ரேயா.

இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் ஸ்ரேயா புகைப்படங்களும்,வீடியோக்கள் என்று ஏதேனும் ஒன்றை பகிர்ந்து வருவார்.தற்போது ஷ்ரேயாவின் கணவர் லிப்லாக் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்,இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்