ட்ரெண்ட் அடிக்கும் முன்னணி நடிகையின் பிகினி புகைப்படம் !
By Aravind Selvam | Galatta | June 22, 2021 15:16 PM IST

2005-ல் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்த மழை படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் ஷ்ரேயா சரண்.இந்த படத்திற்கு முன் உனக்கு 20 எனக்கு 18 உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகையாக நடித்திருந்த ஷ்ரேயா.இந்த படத்தின் மூலம் முழுநேர கதாநாயகியாக அறிமுகமானார்.இந்த படத்தில் இவரது கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் சிவாஜி,தளபதி விஜயுடன் அழகிய தமிழ் மகன்,தனுஷுடன் குட்டி,விக்ரமுடன் கந்தசாமி என்று பெரிய நடிகர்களுடன் நடித்து தனக்கென்ற ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்தார் ஷ்ரேயா.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்தார் ஷ்ரேயா.
டாப் ஹீரோயினாக அனைத்து மொழிகளிலும் கலக்கினார் ஷ்ரேயா.ரஷ்யாவை சேர்ந்த ஆன்ட்ரேய் கொஸ்சேவ் என்பவரை கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் முடித்தார் ஷ்ரேயா.இவர் நடிப்பில் நரகாசூரன்,சண்டக்காரி உள்ளிட்ட படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன.ராஜமௌலி இயக்கத்தில் தயாராகி வரும் RRR படத்தில் முக்கிய கௌரவ வேடத்தில் நடித்துள்ளார் ஷ்ரேயா.
லாக்டவுன் காரணமாக பல பிரபலங்களும் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.ஷ்ரேயா தனது ரசிகர்களுடன் அவ்வப்போது லைவ்வில் வந்து அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.உடற்பயிற்சியில் மிகவும் அக்கறை கொண்டவரான ஷ்ரேயா அவ்வப்போது தனது ஒர்க்கவுட் மற்றும் யோகா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார்.
ஸ்ரேயாவின் சில புகைப்படங்களும்,வீடியோக்களும் வெளியாகி வேற லெவெலில் வைரலாகி வந்தன.தற்போது தனது பழைய பிகினி புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஸ்ரேயா இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.
Suriya and Jyothika's new message to fans - latest photos go viral!
22/06/2021 07:11 PM
Bigg Boss Second Innings announced - Official Breaking Statement!
22/06/2021 06:27 PM
Thalapathy 66 Director's BIG SURPRISE for Vijay fans - Check Out!
22/06/2021 06:13 PM