கடந்த 2005-ம் ஆண்டு வெளியான மழை திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அதன் பின் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி, தளபதி விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் என ஹிட் படங்களில் நடித்தார் ஸ்ரேயா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் கலக்கியவர். 

Shriyasaran

சமீபத்தில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஆன்ட்ரேய் கொஸ்சேவ் என்பவரை திருமணம் செய்தது அனைவரும் அறிந்ததே. தற்போது நடிகை ஸ்ரேயா நடிப்பில் நரகாசூரன், சண்டக்காரி உள்ளிட்ட படங்கள் வெளிவரவிருக்கிறது. 

ShriyaSaran

இந்நிலையில் நடிகை ஸ்ரேயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கணவர் பாத்திரங்கள் கழுவி அவருக்கு உதவுகிறார். இதுகுறித்து பெருமையாக தெரிவித்த ஸ்ரேயா, ஆண்கள் தங்கள் மனைவிக்கு எவ்வாறு உதவுகிறார்கள் என்ற வீடியோவை அவர் வெளியிட வேண்டும் என்று திரைத்துறையை சேர்ந்த நடிகர்களுக்கு சேலஞ்ச் விடுத்துள்ளார்.