கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்களில் கவனம் செலுத்தி வரும் சியான் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சியான் 60 படத்தில் இணையவுள்ளார். சியான் விக்ரமுடன் முதல் முறையாக துருவ் விக்ரமும் இணைந்து நடிக்கவுள்ளார். படத்திற்கு படம் வித்தியாசம் தரும் கார்த்திக் சுப்பராஜ், இதிலும் தனது மாறுபட்ட ஜானரில் விருந்தளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Shreyas Krishna Joins Chiyaan 60 Karthik Subbaraj Shreyas Krishna Joins Chiyaan 60 Karthik Subbaraj

ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பட்டையை கிளப்பியது. படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளில் இறங்கியுள்ள கார்த்திக் சுப்பராஜ், லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பிய பிறகே படப்பிடிப்பு பணிகளில் இறங்குவார் என தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸும் உள்ளது. 

Shreyas Krishna Joins Chiyaan 60 Karthik Subbaraj

தற்போது சியான் 60 படத்தின் ஒளிப்பதிவாளர் பற்றிய ருசிகர தகவல் கிடைத்துள்ளது. ஜகமே தந்திரம் படத்தில் ஒளிப்பதிவாளாராக பணியாற்றிய ஸ்ரேயாஸ் கிருஷ்ணா தான் சியான் 60 படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். இரண்டாவது முறையாக கார்த்திக் சுப்பராஜுடன் இணையும் ஸ்ரேயாஸுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Adutha Padam ... Directed by @ksubbaraj #hadtobeinthefeed

A post shared by kshreyaas (@shreyaas_krishna) on