தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். கன்னடா, தமிழ், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். இவன் தந்திரன், விக்ரம் வேதா, ரிச்சி, கே13 போன்ற படங்களில் நடித்தாலும் நேர்கொண்ட பார்வை படத்தில் பட்டையை கிளப்பினார். 

shraddha

ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, நடனம் பாடல் என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். சிலர் தங்களது சிறிய வயது புகைப்படங்கள் வெளியிட்டும், பல டாஸ்குகள் செய்தும் இந்த லாக்டவுன் நாட்களை கடத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஷ்ரத்தா, இணையத்தில் ட்ரெண்டாகி வரும் #MeAt20 சேலஞ்சை ஏற்றுக்கொண்டடுள்ளார். 20 வயதில் பப்லியாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.  இதனை கண்ட ரசிகர்கள் இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர். 

Shraddha

விஷால் நடிக்கும் சக்ரா திரைப்படம் மற்றும் மாதவன் நடிக்கும் மாறா போன்ற படங்களில் முக்கிய ரோலில் நடிக்கிறார் ஷ்ரத்தா. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Permanently straightened hair, kajal that never came off and eyebrows so thin they could cut through hearts... I was 20 once upon a time, and like I liked to believe - “RAWKING”

A post shared by Shraddha Srinath (@shraddhasrinath) on