பொன்னியின் செல்வன் படத்தில் புதிதாய் இணைந்த பாலிவுட் பிரபலம் ! விவரம் உள்ளே
By Sakthi Priyan | Galatta | February 15, 2020 16:47 PM IST

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டு படமாகிறது இதை மணிரத்னம் இயக்குகிறார். கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிக்க உள்ளனர் என்ற தகவல் தெரியவந்தது. இவர்களுடன் ஜெயராம் , லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ள இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.
தாய்லாந்தில் உள்ள வனப்பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. அதிகாலை மூன்று மணிக்கே ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விரைந்தனர் படக்குழுவினர். பாகுபலி போல் இரண்டு பாகங்களாக உருவாகவிருக்கும் இப்படத்தில் பன்னிரண்டு பாடல்கள் இருக்கக்கூடும் என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார். வரலாற்று சிறப்புமிக்க இந்த படைப்பிற்காக மிகுந்த ஆவலில் காத்திருக்கின்றனர் திரை விரும்பிகள்.
படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நிறைவடைந்தது. சென்னை பாண்டிச்சேரியில் நடந்த படப்பிடிப்பிற்கு பிறகு ஹைதராபாத் விரைந்தனர் படக்குழுவினர். தற்போது படத்தில் சோபிதா துளிப்பாலா இணைந்துள்ளார் என்ற தகவல் தெரியவந்தது. தமிழில் இதுதான் முதல் படம் என்பது கூடுதல் தகவல்.