கடைக்குட்டி சிங்கம் எனும் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். தற்போது ரெட்டை ரோஜா சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இதனால் சமூக வலைதளங்களில் அவரை ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். சீரியலில் போலவே இன்ஸ்டாகிராமில் ஷிவானியின் புகைப்படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு. 

Shivani Narayanan

ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் திரைப்பிரபலங்கள் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கின்றனர். சமையல், நடனம், பாடல், விளையாட்டு, பழைய புகைப்படங்களை பகிர்வது என அசத்தி வருகின்றனர். 

Shivani Narayanan

இந்நிலையில் ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவரது பள்ளிக்கால புகைப்படத்தையும், தற்போதைய புகைப்படத்தையும் இணைத்து பதிவு செய்துள்ளார். மேலும் நான் இன்னும் அப்படியேதான் இருக்கிறேனா..? என கேட்டுள்ள அவர், இது தன்னுடைய ஃபேவரைட் புகைப்படம் என குறிப்பிட்டுள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Do i look the same ? 👀 One of my Favorite picture from my childhood ❤️

A post shared by Shivani ❤️ (@shivani_narayanan) on