பிறந்தநாள் கொண்டாட்டம் இப்படி தான் இருந்தது...ஷிவானி பதிவு !
By Aravind Selvam | Galatta | May 06, 2020 20:42 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு தொடரின் மூலம் இளைஞர்களின் கனவுக்கன்னியாக உருவெடுத்தவர் ஷிவானி நாராயணன்.தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்திருந்தார்.
நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர் ஜோடி நம்பர் ஒன் தொடரிலும் பங்கேற்றார்.ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா என்ற தொடரில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார்.இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அவ்வப்போது தனது நடன வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்தார் ஷிவானி.நேற்று பிறந்தநாளை கொண்டாடிய ஷிவானிக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.இந்நிலையில் தனது பிறந்தநாள் கொண்டாட்டம் இப்படி தான் இருந்தது என்று புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ஷிவானி.