பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் ஷிவானி செய்த முதல் காரியம் !
By Aravind Selvam | Galatta | January 18, 2021 21:28 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு தொடரின் மூலம் சீரியலில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன்.இந்த தொடரில் தனது நடிப்பால் தமிழ் இளைஞர்களின் கனவுக்கன்னியாக உருவெடுத்தவர் ஷிவானி நாராயணன்.தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்திருந்தார்.
நடனத்தில் ஆர்வம் கொண்ட ஷிவானி ஜோடி நம்பர் ஒன் தொடரிலும் பங்கேற்றார்.இவரது நடன வீடியோக்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இதனை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா என்ற தொடரில் நடித்து வருகிறார்.இந்த தொடரில் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார் ஷிவானி நாராயணன்.
கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட இந்த தொடரின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த சீரியலில் இருந்து இவர் விலகினார்.சீரியல் நடிகைகளில் தனக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளத்தையே ஷிவானி பெற்றுள்ளார்.
கடந்த அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் தொடரின் நான்காவது சீசனில் இவர் முக்கிய போட்டியாளராக பங்கேற்று வந்தார்.பைனலுக்கு சில வாரங்களுக்கு முன் இவர் வீட்டை விட்டு வெளியேறினார்.லாக்டவுன் நேரத்தில் தினம் ஒரு போட்டோ அல்லது வீடீயோவை பகிர்ந்து வந்தார் ஷிவானி.இவர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையவே இவரது பதிவுகளை ரசிகர்கள் மிஸ் செய்தனர்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஷிவானி முதல் போஸ்ட்டாக எதனை போடபோகிறார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.பிக்பாஸ் பைனல் நிறைவடைந்த பிறகு தனது புதிய புகைப்படத்துடன் வணக்கம் இன்ஸ்டாகிராம் மக்களே என்று பதிவிட்டுள்ளார் ஷிவானி.இனி தினமும் ஷிவானியின் போஸ்டை எதிர்பார்க்கலாம் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
Suresh Chakravarthy issues a statement on Bigg Boss 4 contracts and agreements
18/01/2021 08:08 PM
Aari's special video announcement for fans after Bigg Boss win | WATCH
18/01/2021 04:30 PM