சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளராகவும்,நடிகையாகவும் இருந்தவர் சித்ரா.தனக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார் சித்ரா.இவர் இன்று காலை சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என்ற செய்தி வெளியானது.ரசிகர்களும்,பிரபலங்களும் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

கிட்டத்தட்ட அனைத்து முன்னணி சேனல்களிலும் பணியாற்றிய இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறினார்.ரசிர்கர்களை நேரில் சந்திப்பது என்று ரசிகர்களுடனும் தனது நேரத்தை செலவிட்டு வந்தார் சித்ரா.

இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த வருட இறுதிக்குள் அல்லது ஜனவரி மாதம் இவர்கள் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் சித்ராவின் இந்த முடிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சித்ராவின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இவரது இந்த திடீர் மறைவு குறித்து பலரும் தங்கள் சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.அந்த வகையில் சூப்பர் சிங்கர்,குக் வித் கோமாளி உள்ளிட்ட தொடர்களின் மூலம் பிரபலமான ஷிவாங்கி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.இதை என்னால் நம்பமுடியவில்லை நேத்து தான் நம்ம ரெண்டு பெரும் சேர்ந்து பாட்டு பாடி டான்ஸ் ஆடினோம்,இன்னும் 24 மணி நேரம் கூட ஆகல அதற்குள்ள ஏன் இப்படி ஒரு விபரீத முடிவு என்று தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

 

shivaangi emotional statement on chithu vj death