தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த எழுத்தாளரும் இயக்குனருமான சித்ராலயா கோபு அவர்கள் எழுதி இயக்கி 1972-ல் வெளிவந்து தமிழ் திரையுலகின் எவர்கிரீன் நகைச்சுவைத் திரைப்படமாக கொண்டாடப்பட்ட நகைச்சுவை திரைப்படம் காசேதான் கடவுளடா. நடிகர்கள் முத்துராமன், தேங்காய் ஸ்ரீனிவாசன், ஸ்ரீகாந்த்,M.R.R.வாசு மற்றும் நடிகைகள் லட்சுமி, மனோரமா உள்ளிட்டோர் நடித்த சிரிப்பு சரவெடி காசேதான் கடவுளடா தற்போது ரீமேக் செய்யப்பட்டுள்ளது .

பிரபல இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் தயாராகியுள்ள காசேதான் கடவுளடா ரீமேக்கில் சிவா & யோகிபாபு முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, ஊர்வசி , ப்ரியா ஆனந்த் ,கருணாகரன், தலைவாசல் விஜய், மனோ பாலா ஆகியோருடன் இணைந்து விஜய் டிவியின் குக் வித் கோமாளி புகழ் & சிவாங்கி முக்கிய கதாபாத்திரஙகளில் நடித்துள்ளனர். 

காசேதான் கடவுளடா ரீமேக் திரைப்படத்தை தயாரிப்பாளர் M.K.ராம் பிரசாத் அவர்களின் MKRP புரொடக்சன்ஸ் மற்றும் இயக்குனர் R.கண்ணனின் மசாலா பிக்ஸ்  இணைந்து தயாரித்துள்ளது. ஒளிப்பதிவாளர் பிரசன்ன.S.குமார் ஒளிப்பதிவில், லியோ ஜான் பால் படத்தொகுப்பு செய்ய N.கண்ணன் இசையமைக்கிறார்.

காசேதான் கடவுளடா ரீமேக் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகும் என தெரிகிறது. இந்நிலையில் காசேதான் கடவுளடா ரீமேக் படத்தின் கலக்கலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ...