தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்திகளில் ஒருவர் தளபதி விஜய்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்த மாஸ்டர் படம் கடந்த பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.கொரோனவை தொடர்ந்து வெளியான மாஸ்டர் படம் வசூலிலும் சாதனை படைத்தது.இதனை தொடர்ந்து தனது 65ஆவது படத்தில் நடித்து வந்தார் விஜய்.

 இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்,அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.யோகி பாபு,மலையாள நடிகர் டாம் சாக்கோ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு Gerogia-வில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.கொரோனாவால் தள்ளிப்போன இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்து சில நாட்களுக்கு முன் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது இந்த ஷூட்டிங்கில் பிரபல மலையாள நடிகர் Shine Tom Chacko சென்னை வந்தடைந்து ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வருகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.மூன்றாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் நிறைவு செய்தபின் படக்குழுவினர் வெளிநாட்டிற்கு சில ஆக்ஷன் காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

shine tom chacko arrives in chennai to start shooting for thalapathy vijay beast