ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரில் நடித்து வரும் முக்கிய நடிகை விலகியுள்ளார் அவருக்கு பதிலாக பிரபல சீரியல் நடிகை இணைந்துள்ளார்

ஜீ தமிழில் ஒளிபரப்பி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று செம்பருத்தி.ஜீ தமிழில் TRP-யை அள்ளி வந்த முக்கிய தொடர்களில் ஒன்றாக செம்பருத்தி உள்ளது.இந்த தொடரில் ஹீரோ ஹீரோயினாக அக்னி மற்றும் ஷபானா நடித்து வருகின்றனர்.ப்ரியா ராமன் மற்றொரு முக்கிய வேடமான அகிலாண்டேஸ்வரி வேடத்தில் நடித்து அசத்தி வந்தார்.

இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமான ஆதி-பார்வதி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.கொரோனாவுக்கு பிறகு இந்த தொடரில் சில முக்கிய மாற்றங்கள் நடந்தன.

புதிய நடிகர்கள் வந்தாலும் தொடரின் பரபரப்பு குறையாமல் சீரியல் குழுவினர் பார்த்துக்கொண்டனர்.பல பிரச்சனைகளை கடந்து இந்த தொடர் 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக சென்று வருகிறது.தொடரின் விறுவிறுப்பை அதிகரிக்கும்படி தற்போது மேலும் ஒரு புது என்ட்ரி தொடரில் இணைந்துள்ளார்.

சித்தி,செல்லமே,அரண்மனை கிளி உள்ளிட்ட பல சீரியல்களில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷில்பா இந்த தொடரில் புது என்ட்ரியாக இணைந்துள்ளார்.2 வருடங்களுக்கு பிறகு சீரியலில் நடிப்பதற்கு திரும்பியுள்ளார்.வில்லியாக கலக்கும் இவரது என்ட்ரிக்கு பிறகு தொடர் எப்படி செல்ல போகப்போகிறது என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.