விஜய் ஆண்டனி நடித்த காளி திரைப்படம் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். அதன் பின் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். இந்த படத்தின் மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே சேர்ந்தது.

ShilpaManjunath

தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். திரைப்பிரபலங்கள் சோஷியல் மீடியாவான முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் ஆக்டிவாக இயங்கி வருகின்றனர். உடற்பயிற்சி, நடனம் மற்றும் சமையல் என பிரபலங்களின் பதிவுகள் ரசிகர்களுக்கும் பயனுள்ளதாகவும், பொழுதுபோக்காகவும் இருக்கிறது.

ShilpaManjunath

இந்நிலையில் நடிகை ஷில்பா மஞ்சுநாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உடற்பயிற்சி செய்யும் ஃபோட்டோவை பகிர்ந்து நீங்கள் எங்கிருக்கிறீர்களோ அங்கிருந்தே தொடங்குங்கள். உங்களிடம் என்ன இருக்கிறதோ அதனை பயன்படுத்துங்கள். உங்களால் என்ன முடியுமோ அதனை செய்யுங்கள் என்ற கருத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தை தெறிக்க விடுகிறது.