ரசிகர்களின் பேராதரவோடு இந்த முறையும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் ஆரம்பத்திலேயே போட்டியாளர்களாக களமிறங்க, முதல் வாரத்தின் முடிவில் முதல் WILD CARD என்ட்ரியாக பிரபல சீரியல் நடிகை மைனா நந்தினியும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த GP முத்து தனது குழந்தைகளை காண விரும்பி அவரே முன்வந்து பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேறினார். கடந்த சில சீசன்களாகவே எதிர்பார்க்கப்பட்ட முத்து முதல் இரண்டு வாரத்திலேயே வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இதனையடுத்து நடைபெற்ற முதல் எலிமினேஷனில் பிரபல நடன இயக்குனர் சாந்தி வெளியேற்றப்பட்டார்.

கடந்த வார இறுதியில் RAP பாடகர் அசல் கோளார் பிக் பாஸ் வீட்டிலிருந்து EVICT-ஆகி வெளியேறினார். தொடர்ந்து நடைபெற்ற கடந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் அந்த டிவி இந்த டிவி டாஸ்க்கில் போட்டிலாளர்கள் மிகவும் அனல் பறக்க சிறப்பாக விளையாடியது ரசிகர்களுக்கு இன்னும் ஆர்வத்தை கூட்டியது.

இந்த வாரம் பிக் பாஸில் ஆயிஷா அஸீம் கதிரவன் ஷெரினா மற்றும் விக்ரமன் ஆகியோர் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது எரிக்சன் ரிசல்ட் வெளியானது. ஷெரினா தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்ட்டாகி வெளியேறியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைத்துள்ளன.