பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்து வெளிவந்த படம் 96. பள்ளி பருவ காதல், நட்பை வைத்து அழகாக மக்கள் மனதை வருடியது இப்படம். தெலுங்கில் ரீமேக்கான இந்த படத்தில் ஷர்வானந்த் மற்றும் சமந்தா நடித்தனர். சிறு வயது ஜானு பாத்திரத்தில் கௌரி கிஷன் நடித்தார். நேற்று வெளியான இப்படம் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. 

sharwanand

தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாய் விளங்கும் ஷர்வானந்த் சமீபத்திய பேட்டி ஒன்றில், மஜிலி திரைப்படத்தில் இருக்கும் சமந்தா போன்ற பெண்ணை தான் திருமணம் செய்யவுள்ளதாக கூறியிருக்கிறார். இளம் நடிகராக இருக்கும் இவருக்கு சமந்தா போன்ற பெண் கிடைக்காதா என்ன... 

samantha

காதல்னா சும்மா இல்லை, எங்கேயும் எப்போதும், நாளை நமதே, JK எனும் நண்பனின் வாழ்க்கை போன்ற படங்களால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷர்வானந்த். விரைவில் இவர் தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.