எங்கேயும் எப்போதும் ஜே கே எனும் நண்பனின் கதை படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானவராக ஆனவர் நடிகர் சர்வானந்த்.தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தெலுங்கில் பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து செம பிஸியான நடிகராக இருந்து வருகிறார்.

இவர் அடுத்ததாக பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள தமிழ்,தெலுங்கு bilingual படத்தில் நடித்துள்ளார்.கணம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கியுள்ளார்.ஜேக்ஸ் பிஜாய் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ரித்து வர்மா இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.பிரபல நடிகை அமலா பல வருட இடைவேளைக்கு பிறகு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இவர்களுடன் நாசர்,ரமேஷ் திலக்,சதிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

டைம் ட்ராவல் கதையாக உருவாகி வரும் இந்த படத்தின் டீஸர் மற்றும் சில பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.மாறிப்போச்சோ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.நடிகர் கார்த்தி இந்த பாடலை பாடியுள்ளார் , அத்துடன் இந்த படத்திற்காக ஒரு மியூசிக் வீடியோவில்ம் தோன்றியுள்ளார்.இந்த மியூசிக் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்