தமிழ் சினிமாவின் சிறந்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக ஜோக்கர், தீரன் அதிகாரம் ஒன்று, அருவி, கைதி என சிறந்த படைப்புகளை வழங்கி வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக கைதி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்காக அஜய் தேவ்கன் இயக்கி நடிக்கும் போலா திரைப்படத்தை தயாரித்து வருகிறது.

இந்த வரிசையில் அடுத்ததாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள கணம் திரைப்படம் வருகிற செப்டம்பர் 9ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகியுள்ள கணம் (தெலுங்கில் ஓகே ஒக்க ஜீவிதம்) படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ஷர்வானந்த் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் ஷர்வானந்த் உடன் இணைந்து ரித்து வர்மா கதாநாயகியாக நடிக்க, அமலா, நாசர், ரமேஷ் திலக், சதீஷ், M.S.பாஸ்கர், ரவி ராகவேந்திரா, வையாபுரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள கணம் திரைப்படத்திற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவில், ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்ய, ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். 

முன்னதாக வெளிவந்த கணம் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கணம் திரைப்படத்தின் சென்சார் குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியானது. கணம் படத்திற்கு சென்சார் “U” சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

A movie made for 'U' all ❤️‍🔥

Enjoy #OkeOkaJeevitham / #Kanam with the entire family ❣️

Book your 🎟️ now
- https://t.co/IiqiIvp6VQ

- https://t.co/gAAuWjVehK

Grand Release on September 9th 🥰
@riturv @amalaakkineni1 @twittshrees @prabhu_sr @DreamWarriorpic pic.twitter.com/b5WVYaAOoP

— Sharwanand (@ImSharwanand) September 7, 2022