சின்னத்திரையில் அனைவருக்கும் பிடித்த நடிகையாக திகழ்பவர் சரண்யா டுராடி. உலகளவில் உள்ள சீரியல் விரும்பிகளின் ஆதர்ஷ நாயகி. ஆரம்பத்தில் தொலைக்காட்சிகளில் செய்தி நிருபராக பணியாற்றியவர், ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்தில் நடித்தார். பின்னர் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார் சரண்யா. 

SharanyaTuradi Resumes Shooting For Ayutha Ezhuthu

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த நெஞ்சம் மறைப்பதில்லை சீரியலில் நடித்திருந்தார். தற்போது ஆயுத எழுத்து எனும் சீரியலில் நடித்து வருகிறார். மௌனிகா நடிக்கும் இந்த தொடரில் கலெக்ட்டராக நடிக்கிறார் சரண்யா. 

SharanyaTuradi Resumes Shooting For Ayutha Ezhuthu

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது மூன்று மாதங்களுக்கு பிறகு இன்று ஷூட்டிங் துவங்கப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.     அரசு அறிவுறுத்தலின் படி, முறையான பாதுகாப்புடன் முகக்கவசம் அணிந்து படப்பிடிப்பு தளத்தில் காணப்பட்டார் சரண்யா. 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

And finally the shoot resumes today after a break of 3 months! Masked collectorey From the sets of Ayutha ezhuthu 😇 #GRATITUDE

A post shared by SHARANYA TURADI (@sharanyaturadi_official) on