செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சின்னத்திரையில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரின் மூலம் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் சரண்யா.இந்த தொடரில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார் சரண்யா.இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.இதனை தொடர்ந்து தெலுங்கில் ரோஜா என்ற சீரியலில் நடித்து வந்தார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்றான ஆயுத எழுத்து தொடரில் நடித்து வருகிறார்.மௌனிகா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த தொடரில் ஆனந்த் முன்னணி நாயகனாக நடிக்கிறார்.ஸ்யமந்தா,டீனா,ஜனனி அசோக்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் சீரியல் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து அனைத்து தொடர்களின் ஷூட்டிங்குகளும் தொடங்கின.இவர் ஹீரோயினாக நடித்து வரும் ஆயுத எழுத்து தொடரின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இது குறித்து அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் அப்டேட்களை பதிவிடுவார் சரண்யா.இந்த தொடரின் புதிய எபிசோடுகள் விறுவிறுப்பாக கடந்த ஜூலை 27ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.புதிய எபிசோடுகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பையும் பெற்று வருகிறது.

பரபரப்பாக சென்று கொண்டிருந்த இந்த தொடர் நேற்றுடன் நிறைவுபெற்றது.திடீரென்று இந்த தொடர் நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் சிலர் அதிர்ச்சியில் உள்ளனர்.இந்த சீரியல் இன்னும் தொடரும் என்றும்,பல விறுவிறுப்பான திருப்பங்களை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இது சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.இது குறித்து இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வந்த தற்போது ஒரு வீடீயோவை வெளியிட்டுள்ளார்.அதில் சீரியல் திடீரென்று நிறுத்தப்பட்டதற்கான காரணம் தனக்கும் தெரியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.இதுவரை ஆதரவு கொடுத்து வந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அவர்,விரைவில் மற்றுமொரு தொடரில் உங்களை சந்திப்பேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Thank You All ! 🙏🏽❤️ This Has Been a Wonderful Ride. Until Next Time , Ciao Kanmanis ❤️

A post shared by SHARANYA TURADI (@sharanyaturadi_official) on